வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்: நன்னிலம் வட்டத்தில் 952 விண்ணப்பங்கள் அளிப்பு

நன்னிலம் வட்டத்தில் உள்ள 126 வாக்குச்சாவடி மையங்களில் இரண்டு நாள்கள் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த முகாமில், 952 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

நன்னிலம் வட்டத்தில் உள்ள 126 வாக்குச்சாவடி மையங்களில் இரண்டு நாள்கள் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த முகாமில், 952 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த முகாம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் (பிப். 23, 24) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றது.
அதன்படி, திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் நன்னிலம், பேரளம், கொல்லுமாங்குடி, பூந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 126 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், திருத்தம் செய்தல் ஆகியவற்றை மேற்கொள்ள சிறப்பு முகாம் 252 அலுவலர்களால் நடத்தப்பட்டது. இந்த முகாம்களை நன்னிலம் வட்டாட்சியர் ஆர். பரஞ்சோதி மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
 இந்த சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவடைந்த நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் நன்னிலம் வட்டம் முழுவதும் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி திருத்தம் போன்றவற்றுக்காக 952 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று நன்னிலம் வட்டாட்சியர் பரஞ்சோதி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com