சுடச்சுட

  

  நன்னிலம் அருகேயுள்ள ஆண்டிப்பந்தல் கிராமத்தில் குற்றச்செயல் மற்றும் அப்பகுதி நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 
  திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில், நன்னிலம் தாலுக்காவுக்குள்பட்ட ஆண்டிப்பந்தல் கிராமத்தில் குற்றச்செயல்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் வர்த்தகர் சங்கம் சார்பில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, வர்த்தகர் சங்கத் தலைவர் ஆர். சண்முகம், பொதுச் செயலர் டி. சரவணன், பொருளாளர் ஜி. கண்ணன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் ஒன்றிணைந்து ரூ. 50 ஆயிரம் ஆண்டிப்பந்தல் பேருந்து நிலையம் அருகிலுள்ள கடைத்தெரு உள்ளிட்ட சில இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதன் தொடக்க விழாவில், நன்னிலம் டிஎஸ்பி அருண் சிசிடிவி மேராவை இயக்கிவைத்தார். அப்போது அவர் பேசியது: சிறிய இந்த ஆண்டிப்பந்தல் கிராமத்தில் ஆர்வத்துடன் அதே சமயத்தில் விழிப்புணர்வுடன் இந்த சிசிடிவி கேமரா பொருத்தியது பாராட்டுக்குரியது. இதேபோல் பல்வேறு பகுதியில் சமூக அக்கறையுடன் சிசிடிவி கேமரா பொருத்த முயற்சி மேற்கொண்டால் பல்வேறு குற்றச்செயல்கள் தடுக்கப்படும், குற்றச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் பிடிக்க காவல் துறைக்கு உதவியாக இருக்கும் என டிஎஸ்பி 
  அருண் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai