சுடச்சுட

  

  தமிழ்நாடு மின்சார வாரியப் பொறியாளர்கள் சங்கத்தின் ஜேசிஐ மன்னார்குடி பவர் அமைப்பின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
  ஜேசிஐ பவர் கிளைத் தலைவர் க. கண்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், அமைப்பின் நிகழாண்டுக்கான தலைவராக பி. சரவணன், செயலராக த. கலைவாணன், பொருளாளராக வி. ராஜசேகர் மற்றும் இயக்குநர்கள் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.
  சிறப்பு அழைப்பாளர்களாக ஜேசிஐ  மண்டலத் தலைவர் பி.ஜி. கைலாஷ், மண்டல துணைத் தலைவர் வி. ராஜ்குமார், தேசியப் பயிற்சியாளர் சா. சம்பத் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவையொட்டி, மரக்கன்று வழங்குதல், ஏழை மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முனைவர் சா. சம்பத் எழுதிய இதமான சாரல்கள் என்ற கவிதை நூலை சமூக ஆர்வலர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன் வெளியிட, அதனை ஜேசிஐ நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.
  நிகழ்சியில், மண்டலச் செயலர் டி. செல்வகுமார், மண்டல இயக்குநர்கள் வீ. காந்திலெனின், ஆர். ராபர்ட் கென்னடி, மா. ராஜ்மோகன், ஜேசிஐ மன்னை தலைவர் எம்.வி. முத்தமிழ்ச்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai