சுடச்சுட

  

  ஹைட்ரோ கார்பன் திட்டப் பணிகளை மேற்கொள்ள விடமாட்டோம்

  By DIN  |   Published on : 12th January 2019 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஹைட்ரோ கார்பன் திட்டப் பணிகளை மேற்கொள்ள விடமாட்டோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
  திருவாரூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசு, ஹைட்ரோ கார்பன் எடுக்க 2-ஆவது  மண்டலமாக திருவாரூர் அருகே திருக்காரவாசல் பகுதியை மையமாகக் கொண்டு, 494 சதுர கிலோமீட்டர் அளவுக்கு தேர்வு செய்துள்ளது. ஏற்கெனவே விவசாயிகள், பொதுமக்கள் இந்த திட்டங்களால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டங்களையும் தமிழகத்தில் வர விடமாட்டோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் எந்த பணியையும் மேற்கொள்ள விடமாட்டோம்.
  பொங்கல் பரிசை பணக்காரர்களுக்கு வழங்காவிட்டால் அந்த தொகையையும் சேர்த்து ஏழைகளுக்கு பிரித்து கொடுக்கலாம். தலைவர்கள் ஓரிடம், மக்கள் ஓரிடம் என இருக்கும் நிலையில் நேரடியாக  மக்களை சந்திப்பது ஆரோக்கியமான ஒன்று. அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளில் ஊராட்சி சபை மூலம் மக்களை சந்தித்து வருவது சிறப்பான திட்டமாகும். எந்த தேர்தலையும் சந்திக்க தைரியம் இல்லாத கட்சியாக அதிமுக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலையும் தள்ளிவைத்தால் நல்லது என்று கூட அவர்கள் எண்ணக்கூடும் என்றார் கே. பாலகிருஷ்ணன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai