விபத்து வழக்கில் ஓட்டுநருக்கு2 ஆண்டு சிறை

திருத்துறைப்பூண்டி அருகே விபத்து வழக்கில் ஓட்டுநருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. 

திருத்துறைப்பூண்டி அருகே விபத்து வழக்கில் ஓட்டுநருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. 
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பெரிய கொத்தமங்கலத்தைச் சேர்ந்த சீவல் வியாபாரி கார்த்தி (28) கடந்த 2013-ஆம் ஆண்டு நவ. 5-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வெள்ளங்கால் ஓவரூர் சாலையில் வங்கநகர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டாடா ஏசி வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி போலீஸார்  வழக்குப் பதிவு செய்து ஓவரூரைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜேஷை கைது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது . வழக்கை விசாரித்த நீதிபதி கவிதா விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் ராஜேஷ்க்கு (26) இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை,  ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com