சுடச்சுட

    

    கந்தன்குடி கோயிலில் சஷ்டி வழிபாடுகந்தன்குடி கோயிலில் சஷ்டி வழிபாடு

    By DIN  |   Published on : 13th January 2019 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    நன்னிலம் வட்டம், பேரளம் அருகே உள்ள கந்தன்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. 
    கந்தன்குடியில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. முருகன் கோயில் கொண்டுள்ள தலங்களில் அவர் விரும்பி குடிகொண்ட தலமாக இக்கோயில் போற்றப்படுகிறது. இதனால், இப்பகுதிக்கு கந்தன்குடி என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
    இக்கோயிலில் மார்கழி மாத சனிவார உத்திராட நட்சத்திர சஷ்டியையொட்டி, சுவாமிக்கு சிறப்பு மகா அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள்
    கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai