சுடச்சுட

  


  திருவாரூரில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். துரை அண்மையில் பாராட்டு தெரிவித்தார்.
  மன்னார்குடி நகரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து, திருவாரூர் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் மஞ்சுளா தலைமையிலான போலீஸார் சோதனை நடத்தி, 181 மதுப்புட்டிகள், ரூ. 24,720 ஆகியவற்றை கைப்பற்றினர். சட்டப்பூர்வ நடவடிக்கையில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மற்றும் போலீஸாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். துரை பாராட்டு தெரிவித்தார்.
  திருவாரூர் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தது தொடர்பாக சென்னை, குன்றத்தூரைச் சேர்ந்த ராஜா என்பவர் மீது கடந்த ஜூன் மாதம் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகளுக்கான பாலியல் தாக்குதல் தடைச்சட்டத்தின் கீழ் (போஸ்கோ), காவல் ஆய்வாளர் ராணி வழக்குப் பதிவு செய்தார். விசாரணை முடிவில், ராஜாவுக்கு 2 மாத சிறை தண்டனை, ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து காவல் ஆய்வாளர் ராணி உள்ளிட்டோரை மாவட்ட எஸ்பி எம். துரை பாராட்டினார். இதேபோல், சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் அனந்தபத்மநாபன், சிறப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai