சுடச்சுட

  


  மன்னார்குடியில் செயல்பட்டு வரும் ஜேசிஐ மன்னை அமைப்பின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  தலைவராக வேதா எம்.வி. முத்தமிழ்ச்செல்வம், செயலர் கே. வினோத், பொருளாளர் டி. மதிவாணன், இணைச் செயலர் எம். ராமச்சந்திரன் மற்றும் துணைத் தலைவர்கள், இயக்குநர்கள் என தலா 7 பேர் பொறுப்பேற்றுக் கொண்டனர். இலக்கியப் பேச்சாளர் கோமல். தமிழமுதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, வாசிப்பை நேசிப்போம் என்ற திட்டத்தின்படி, கிராமப்புற அரசுப் பள்ளிகளில் சிறுவர் நூலகங்கள் அமைக்கும் வகையில், இருள்நீக்கி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கும்மட்டித்திடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எளவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மேலாளவந்தசேரி புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளின் நூலகங்களுக்கான புத்தகங்களை வழங்கினார். அவற்றை அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பெற்றுக் கொண்டனர்.
  மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் வ. அசோகன் கலந்துகொண்டு, தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளையும், மன்னார்குடி மேலவீதி அர்பன் வங்கி உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடைகளையும் வழங்கினார். ஜேசிஐ மன்னை தலைவர் அஞ்சறைப்பெட்டி ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மண்டலத் தலைவர் பி.ஜி. கைலாஷ், மண்டல முன்னாள் தலைவர் வி.எஸ். கோவிந்தராஜன், என்.கே. சரவணகுமார், முன்னாள் தேசிய இயக்குநர் ஏ. ராமன், மண்டல துணைத் தலைவர் சி. சீனிவாசன், மண்டல செயலர் டி. செல்வகுமார், மண்டல இயக்குநர் எஸ். ராஜ்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai