கூத்தாநல்லூர் பகுதி ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் மார்கழி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி


கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் மார்கழி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
லெட்சுமாங்குடியில் கொரடாச்சேரி பிரதான சாலையில் அருள்பாலிக்கும் ஜெயசக்தி ஆஞ்சநேயர் கோயிலில், ஆஞ்சநேயருக்கு மஞ்சள் பொடி, தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், வெண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா கண்ணன், மோகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். 
இதேபோல், வேளுக்குடியில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த தெற்கு பார்த்த ஆஞ்சநேயர் கோயிலில், மூலவர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூமா தேவி சமேத லெட்சுமி நாராயணர், சீதா, ராமர், லெட்சுமணன் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன.
இதேபோல், மூலங்குடி லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், ராம பக்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com