கேரள பாஜக, காங்கிரஸ் கட்சிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கேரளத்தில் நடைபெறும் வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்தும், அம்மாநில பாஜக, காங்கிரஸ்


கேரளத்தில் நடைபெறும் வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்தும், அம்மாநில பாஜக, காங்கிரஸ் கட்சிகளைக் கண்டித்தும் திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்களை அனுமதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை வரவேற்ற கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேவேளையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்து பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கேரள மாநில பாஜக, காங்கிரஸ் கட்சிகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். 
இதில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும், மாநிலக்குழு உறுப்பினருமான வி. மாரிமுத்து பங்கேற்று பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.எஸ். கலியபெருமாள், நா. பாலசுப்ரமணியன், ஜி. பழனிவேல், ஆர். குமாரராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com