கால்நடைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கி கொண்டாட்டம்

திருவாரூர் பகுதியில் புதன்கிழமை மாட்டுப் பொங்கலையொட்டி கால்நடைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கி கொண்டாடப்பட்டது. 

திருவாரூர் பகுதியில் புதன்கிழமை மாட்டுப் பொங்கலையொட்டி கால்நடைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கி கொண்டாடப்பட்டது. 
பொங்கல் பண்டிகை தமிழர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் 2-ஆவது நாளாக விவசாயத்துக்கு பேருதவியாக இருக்கும் கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. 
இதையொட்டி, மாடுகளுக்கு மாலைகள் அணிவித்து, அலங்கரிக்கப்பட்டு, பின்னர் அவைகளுக்கு பொங்கல் ஊட்டி வழிபடுவது வழக்கம். அந்த வகையில், திருவாரூர் பகுதியில் ஆடு, மாடுகள் வைத்திருப்பவர்கள் காலையிலிருந்து அவற்றை குளிப்பாட்டி, அலங்கரித்து
வழிபட்டனர்.
இறைச்சி விற்பனை அதிகம்: இதேபோல் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் மீன், கோழி, ஆடு உள்ளிட்ட இறைச்சி விற்பனை கடைகள் ஆங்காங்கே புதிதாக உருவாகியிருந்தன. மக்கள் நீண்ட வரிசையில் நின்று இறைச்சிகளை வாங்கிச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com