"திடக்கழிவுகளோடு மருத்துவக் கழிவுகளை சேர்த்து வழங்கினால் அபராதம்'
By DIN | Published On : 01st July 2019 01:54 AM | Last Updated : 01st July 2019 01:54 AM | அ+அ அ- |

திருவாரூரில் மருத்துவக் கழிவுகளை, திடக்கழிவுகளோடு சேர்த்து வழங்கினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் நகரப்பகுதியில் உள்ள மருத்துவமனையின் அலுவலர்களுடனான கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையர் என். சங்கரன் தலைமை
வகித்தார்.
அனைத்து மருத்துவமனை மருத்துவ அலுவலகங்களும், மருத்துவக் கழிவுகளைக் கையாள்வது குறித்த விதிகளை பின்பற்ற வேண்டும். மருத்துவமனையில் உருவாகும் மருத்துவக் கழிவுகள் 48 மணி நேரத்துக்கு மேல் சேமித்து வைக்காமல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் வழங்க வேண்டும். மருத்துவக் கழிவுகள் கையாளும் விதியில் தெரிவித்துள்ளபடி கழிவுகள் கையாளப்பட வேண்டும். மருத்துவமனையில் உருவாகும் திடக்கழிவுகளோடு மருத்துவக் கழிவுகளை சேர்த்து வழங்குவது, பொது இடங்களில் கொட்டுவது முற்றிலும் தவறான செயலாகும். அவ்வாறு கழிவுகளைக் கையாள்வது தெரிய வருமானால் அபராதம் விதிக்கப்படும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.