சுடச்சுட

  

  பாரத பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்கீழ் நீடாமங்கலம் பஜார் கிளை அஞ்சலகத்தில் கணினி மூலம் ஆன்லைன் சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. 
  இச்சேவையை தஞ்சாவூர் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்து பேசியது: பாரத பிரதமர் நரேந்திரமோடியால் 1.7.2015-இல் டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியாக அஞ்சல் துறையில் தொழில்நுட்பம் அதிகளவில் தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
  தஞ்சாவூர் கோட்டத்துக்குள்பட்ட 294 கிளை அஞ்சலகங்களிலும் டர்பான் (டிஜிட்டல் அட்வான்ஸ்மென்ட் ஆப் ரூரல் போஸ்ட் ஆபிஸ் பார் நியூ இந்தியா) கருவி வழங்கப்பட்டு அதன்மூலம் அனைத்துப் பரிவர்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன. பதிவு தபால், விரைவு தபால் மற்றும் இ-மணியார்டர் போன்ற அனைத்து சேவைகளும் இக்கருவி மூலம் வழங்கப்படுகின்றன. குறிப்பாக இ.மணியார்டர் கிளை அஞ்சலகத்தில் பதிவு செய்யப்பட்டவுடன் அந்த விவரம் உடனடியாக பணம் பெறுபவரது அஞ்சலகத்துக்கு நேரடியாக சென்றடைகிறது. மேலும் சேமிப்பு வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகள், கிராமப்புற அஞ்சலக ஆயுள்காப்பீட்டு பிரிமியத் தொகை செலுத்துதல் போன்ற சேவைகளும் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து பரிவர்த்தனைகளும் உடனே சென்ட்ரல் சர்வருக்கு  சென்றடைகிறது என்றார். 
  நிகழ்ச்சியின்போது, புதியதாக கணக்கு தொடங்கியவர்களுக்கு உடனடியாக பாஸ்புத்தகம் வழங்கப்பட்டது. இதில், உதவி அஞ்சல் கண்காணிப்பாளர்கள் பி. பிரேம்ஆனந்த் (மன்னார்குடி), பி. கார்த்திகேயன் (தஞ்சாவூர்) நீடாமங்கலம் அஞ்சலக அலுவலர் என். காமராஜ், பஜார் கிளை அஞ்சலக அலுவலர் எம். உஷாராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai