சுடச்சுட

  

  திருவாரூர் அருகேயுள்ள கொரடாச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிறப்பு பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
  கொரடாச்சேரி, நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கென இந்த கூட்டம் நடைபெற்றது. கட்சியின் கொரடாச்சேரி ஒன்றியச் செயலர்
  கே. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலர் ஜி. சுந்தரமூர்த்தி  பங்கேற்று, மக்களவைத் தேர்தல் குறித்தும், தேர்தல் முடிவுகள் குறித்தும் விளக்கிப் பேசினார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நா. பாலசுப்பிரமணியம், பி. கந்தசாமி, எம். சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai