சுடச்சுட

  

  தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மனை வழங்கக் கோரிக்கை

  By DIN  |   Published on : 02nd July 2019 07:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மன்னார்குடியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடியிருப்பு மனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்திடம், மன்னார்குடி கோபிரளயம் தென்கரை பகுதியைச் சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை வழங்கிய கோரிக்கை மனு விவரம்: ஜூன் 17-ஆம் தேதி கோபிரளயம் பகுதியில் 14 குடிசை வீடுகள் எதிர்பாராத விதமாக தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தது. தற்போது, வீடு இல்லாமல், துயரத்தில் உள்ளோம். பள்ளிக் குழந்தைகளும், முதியவர்களும் சிரமப்படுகின்றனர். எனவே, 14 குடும்பத்துக்கும் மாற்று இடம் வழங்கி உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai