சுடச்சுட

  

  திருவாரூர் அருகேயுள்ள அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் மருத்துவர் தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
  ஆண்டுதோறும் ஜூலை 1-ஆம் தேதி இந்திய மருத்துவர்களின் சேவையை பாராட்டும் வகையில், மருத்துவர் தினவிழா கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக அடியக்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தினர் மருத்துவர் தினவிழாவை கொண்டாடினர். நிகழ்ச்சியில், மருத்துவ அலுவலர்கள் குருதேவ், பிரியங்கா, பயிற்சி மருத்துவர்கள் செந்தில்ராஜ், சிந்து ஆகியோருக்கு நுகர்வோர் மன்ற நெறியாளர் தமிழ்க்காவலன், மன்ற உறுப்பினர்கள் சுவேதா, கவிப்பிரியா ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்து, நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai