"குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பெற்றோருக்கு அவசியம்'

குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கிராமப்புறங்களில் உள்ள பெற்றோருக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆட்சியர் த. ஆனந்த் பேசினார்.

குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கிராமப்புறங்களில் உள்ள பெற்றோருக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆட்சியர் த. ஆனந்த் பேசினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியது: மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுவின் நோக்கமானது, குழந்தைகளின் பாதுகாப்பை  உறுதி செய்வதே ஆகும். குறிப்பாக, குழந்தைத் திருமணம் நடைபெறுவது குறித்து தகவல் கிடைக்கப்பெற்றவுடன் குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் குறித்த தகவல்கள் கிடைத்தவுடன், அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்க வழிவகை செய்ய வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கிராமப்புறங்களில்  உள்ள பெற்றோருக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் பராமரிப்பு  இல்லங்களில் மருத்துவ முகாம் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து இளைஞர் நீதிக்குழுமத்தில் உள்ள நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க, மாவட்ட கூடுதல் குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜயகுமார் அறிவுறுத்தினார். கூட்டத்தை தொடர்ந்து, குழந்தைகள் நலக்குழு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆ. தியாகராஜன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பெ. செல்வராசு, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாஸ்கர், திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராணி, குழந்தைகள் நலக்குழு தலைவர் சி. ஜீவானந்தம் மற்றும் உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் குழந்தைகள் இல்லப் பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com