மைய நூலகத்தில் கருத்தரங்கம்
By DIN | Published On : 03rd July 2019 07:41 AM | Last Updated : 03rd July 2019 07:41 AM | அ+அ அ- |

திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், வானமும், ஞானமும் எனும் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் பங்கேற்று பேசுகையில், தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லை என்பது போலவே, வடக்கு கிழக்கு பருவமழை எப்போதும் கணிக்கப்படும் கால அளவைத் தாண்டி தாமதமாக, அதாவது நவம்பர் 8-ஆம் தேதியில் தொடங்க வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக மக்கள் குடிநீரை சிக்கனமாகவும், மழை நீரை சேமித்து வைக்கவும் பழகிக் கொள்ள வேண்டும் என்றார். மேலும் வாசகர்கள், போட்டித் தேர்வு மாணவர்கள் கேட்ட வானவியல் தொடர்பான கேள்விகளுக்கு தகுந்த விளக்கமளித்தார். தொடர்ந்து, மானுடம் கண்ட பேரிடர்கள் என்ற தலைப்பில் பேராசிரியர் அறிவழகன் பேசினார். நிகழ்வில் வாசகர் வட்டத் தலைவர் குரு.சந்திரசேகரன், பேரா. நடராஜன், திருவாரூர் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் சக்தி செல்வகணபதி, திருவாரூர் ஒன்றிய அறிவியல் இயக்கச் செயலர் இப்னு, நூலகர் ஆசைத்தம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.