அரசுப் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள்
By DIN | Published On : 05th July 2019 02:37 AM | Last Updated : 05th July 2019 02:37 AM | அ+அ அ- |

கொரடாச்சேரி அருகேயுள்ள பத்தூர் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப் பட்டன.
ஒளி உமிழும் இருமுனைய தொலைக்காட்சிப் பெட்டி (எல்இடி டிவி), குழந்தைகளுக்கான குறிப்பேடுகள், எழுது பொருள்கள், கடலை மிட்டாய் உள்ளிட்டவை இந்த நிகழ்வில் வழங்கப்பட்டன.
இதில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ராம்கி, செள. வினோத்ராஜா, ந. செல்வமணி உள்ளிட்டோர் பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் இந்த பொருள்களை வழங்கினர்.