நாளை குடிமைப் பொருள் குறைதீர் கூட்டம்

திருவாரூரில் பொது விநியோகத் திட்ட குடிமைப் பொருள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் சனிக்கிழமை (ஜூலை 13) நடைபெற உள்ளது.

திருவாரூரில் பொது விநியோகத் திட்ட குடிமைப் பொருள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் சனிக்கிழமை (ஜூலை 13) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில், பொது விநியோகத் திட்ட சிறப்பு பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், சனிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
திருவாரூர் வட்டம், ஓடாச்சேரியில் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், நன்னிலம் வட்டம், பில்லூரில் திருவாரூர் சரக துணைப் பதிவாளர் தலைமையிலும், குடவாசல் வட்டம், குடவாசலில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் தலைமையிலும், வலங்கைமான் வட்டம், மாத்தூரில் திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் தலைமையிலும், நீடாமங்கலம் வட்டம், எடமேலையூர்-1 இல் திருவாரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், மன்னார்குடி வட்டம், சேரிகண்டமங்கலத்தில் மன்னார்குடி வருவாய்க் கோட்ட அலுவலர் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி வட்டம், கட்டிமேட்டில் மன்னார்குடி சரக துணைப் பதிவாளர் தலைமையிலும், கூத்தாநல்லூர் வட்டம், கமலாபுரத்தில் திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைப் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தலைமையிலும் இந்த கூட்டங்கள் நடைபெற உள்ளன. 
  எனவே, தொடர்புடைய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பொது விநியோகத் திட்ட அங்காடிகளின் செயல்பாடுகள் குறித்தும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்றவைகள் குறித்தும், கடை மாற்றம், முகவரி மாற்றம் போன்றவை குறித்தும் தங்களது கோரிக்கை மனுக்களை இந்த முகாமில் அளித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com