சுடச்சுட

  

  திருவாரூருக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளராக அண்மையில் நியமனம் செய்யப்பட்டார். இவர், சனிக்கிழமை திருக்குவளையில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி பிறந்த இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இதையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு திருவாரூர் வந்தார். 
  திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக திருவாரூர் வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவாரூர் சன்னிதி தெருவில் உள்ள கலைஞர் இல்லத்தில் ஓய்வெடுக்கும் அவர், சனிக்கிழமை காலை காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்திவிட்டு, நாகப்பட்டினம் புறப்பட்டுச் செல்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai