சுடச்சுட

  

  திருவாரூர் அருகே தப்ளாம்புலியூர் வாய்க்காலைத் தூர்வாரும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
  நாரணமங்கலம் தொடங்கி தப்ளாம்புலியூர் வரையிலான தலைப்பு வாய்க்கால் 4 கி.மீ. தூரம் கொண்டது. இந்த வாய்க்கால் பாண்டவையாற்றில் இருந்து தப்ளாம்புலியூர் வரை சென்று, அங்கிருந்து 6 வாய்க்காலாக பிரியும். இந்நிலையில், இந்த வாய்க்காலைத் தூர்வாரும் வகையில், அப்பகுதி மக்கள் மற்றும் பாசனதாரர் சங்கம் சார்பில் நிதி திரட்டப்பட்டது. அதன்படி, பொக்லைன் இயந்திரம் உதவியுடன் வாய்க்காலைத் தூர்வாரும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.  இதையொட்டி, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில், அப்பகுதி மக்கள் பங்கேற்று, நிகழாண்டில் தேவையான அளவு மழை பெய்து, விவசாயம் செழிப்பாக நடைபெற வேண்டுமென வேண்டிக் கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai