சுடச்சுட

  

  திருவாரூர் அருகே தலைக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  தலைக்கவசம் அணிவது கட்டாயம் எனவும், இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து வருவதை போலீஸார் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. 
  இதையடுத்து திருவாரூரில் பல்வேறு இடங்களில் போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பிரசாரமும் செய்து வருகின்றனர். இந்த பிரசாரத்தில், தலைக்கவசம் இல்லாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை, கொடுத்து அறிவுரை வழங்குகின்றனர். அத்துடன் துண்டுப் பிரசுரத்தில் உள்ள வாசகங்களை உறுதிமொழியாக ஏற்கச் செய்கின்றனர். இதையொட்டி, திருவாரூர் அருகே விளமல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இல்லாமல் வந்தவர்களிடம், துண்டுப் பிரசுரங்களை, திருவாரூர் நகர போலீஸார் வழங்கினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai