சுடச்சுட

  

  கூத்தாநல்லூரில் அங்கன்வாடி மையம் ஒன்று பாதுகாப்பற்ற நிலையில் செயல்பட்டு வருகிறது.
  மன்னார்குடி ஒன்றியத்துக்கு உள்பட்ட கூத்தாநல்லூர் வட்டம், லெட்சுமாங்குடி, சிவன் கோயில் தெருவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தில் தலா ஓர் ஆசிரியர், உதவியாளர் என இருவர் பணியில் உள்ளனர். இந்த அங்கன்வாடி மையம் போதிய பாதுகாப்பின்றி இயங்கி வருகிறது.
  இங்கு வரக்கூடிய குழந்தைகள் பெரும்பாலும் 2 வயதுக்குள்தான் இருப்பார்கள். அந்த பச்சிளங் குழந்தைகள் செல்லக்கூடிய நுழைவு வாயிலின் வெளியே ஓடும் சாக்கடை கால்வாய் மூடப்படவேயில்லை. குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் சாக்கடையைக் கடந்துச் செல்வதற்காக ஒரே ஒரு கருங்கள் இணைப்பாக போடப்பட்டுள்ளது. மற்றபடி, எந்தப் பாதுகாப்பும் இல்லாத நிலைதான் உள்ளது. 
  மேலும், குழந்தைகள் சிறுநீர் கழிப்பதற்கும் இந்த கருங்கள் வழியாகத்தான் செல்ல வேண்டும். கழிவறைக்கு செல்லக்கூடிய பாதை அதைவிட மோசமாகவும், கரடு முரடாகவும் காட்சியளிக்கிறது. மேலும், அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சமையல் செய்வதற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் வசதியும் இல்லை. சமையலுக்கான தண்ணீரை 50 அடி தூரத்தில் உள்ள நகராட்சியின் கைபம்பிலிருந்துதான் கொண்டு வந்து சமையல் செய்யப்படுகிறது. இதை மாவட்ட நிர்வாகம் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai