சுடச்சுட

    

    மயிலாடுதுறை வரும் ரயில்களை திருவாரூர் வரை நீட்டிக்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 13th July 2019 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை வரை வரும் அனைத்து பயணிகள் ரயிலையும் திருவாரூர் வரை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    திருவாரூரில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலர் ஆர். ரமேஷ் வெளியிட்ட அறிக்கை:  திருவாரூர்- காரைக்குடி மார்க்கத்தில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட்டுகளுக்கு, ரயில் பயணிகளின் நலன் கருதி உடனடியாக கேட் கீப்பர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்குடியிலிருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில், அந்தியோதயா ரயிலை இயக்க வேண்டும். திருவாரூர், திருத்துறைப்பூண்டி பகுதிகளிலிருந்து சென்னை செல்வதற்கு வசதியாக, காரைக்குடி- சென்னை வழித்தடத்தில் விரைவு ரயில் ஒன்றை இயக்க வேண்டும். 
     திருவாரூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு நேரம், முன்பிருந்தது போலவே காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இடைவேளை இல்லாமல் மீண்டும் இயங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை வரை வரும் அனைத்து பயணிகள் ரயிலையும் திருவாரூர் வரை நீட்டிக்க வேண்டும். தஞ்சாவூர் வரை வருகின்ற அனைத்து பயணிகள் ரயிலையும் காரைக்கால் வரை நீட்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai