சுடச்சுட

    

    மு.க. ஸ்டாலினை கண்டித்து ஆர்ப்பாட்டம்: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் 40 பேர் கைது

    By DIN  |   Published on : 13th July 2019 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை கண்டித்து, அவரது உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் 40 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    சட்டப் பேரவையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனை, திமுக தலைவர் மு.க.  ஸ்டாலின் ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன் ஆகியோரது உருவ பொம்மைகளை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருவாரூர் தெற்கு மாவட்டத் தலைவர் ரஞ்சித் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வடக்கு மாவட்டச் செயலர் ஆரோக்கிய செல்வம், தெற்கு மாவட்டச் செயலர் ரஜினிபாண்டியன், நகரச் செயலர் பாவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai