விலையில்லா மடிக்கணினிவகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 13th July 2019 08:23 AM | Last Updated : 13th July 2019 08:23 AM | அ+அ அ- |

தமிழக அரசால் வழங்கப்படும் இலவச மடிக்கணினியை அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் உடனடியாக வழங்கக் கோரி, நெடுங்குளம் பள்ளி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த பேரளம் காவல் துறையினர், ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர், பள்ளிக்கல்வித் துறை, வருவாய்த் துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில், ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஹரிசுர்ஜித் தலைமையில் மாவட்டத் துணைச் செயலாளர் பா. ஆனந்த், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதன்பாலா, நன்னிலம் கிளைக்குழுவைச் சேர்ந்த தீபன்ராஜ், அஜய் உள்ளிட்டோர் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.