ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம்  மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் சார்பில்,

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம்  மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் சார்பில், கொரடாச்சேரி வட்டாரத்திலுள்ள கொத்தங்குடி கிராமத்தில் சிறுதானியப் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மற்றும் மதிப்புக் கூட்டுதல் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மு.ராமசுப்பிரணியன் தலைமை வகித்து, தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சமயங்களில் குதிரைவாலியை சாகுபடி செய்வது மிகவும் ஏற்றது எனத் தெரிவித்தார்.
மண்ணியல் துறை உதவி பேராசிரியர் அனுராதா, சிறுதானியப் பயிர்கள் சாகுபடிசெய்வதற்கு ஏற்ற மண் வகைகள் மற்றும் விதை நேர்த்தி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளித்தார்.
பூச்சியியல்துறை உதவி  பேராசிரியர் ராஜா.ரமேஷ், காவிரி டெல்டா மாவட்டங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு குதிரைவாலி சாகுபடி செய்யப்பட்டதாகவும், வறட்சியிலும் வளரும் சிறப்பு  கொண்டது,  தண்ணீர் தேங்கினாலும் தாக்குபிடித்து வளரக்கூடியது எனத் தெரிவித்தார். மேலும். பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலுக்கு அதிகம் உள்ளாகாததால் குதிரைவாலி சாகுபடிசெய்வதற்கு பராமரிப்பு செலவு குறைவு என்றார். 
பயிற்சி உதவியாளர் ஆ.ராஜேஷ்குமார் பேசுகையில், குதிரைவாலி சாகுபடி செய்வதற்கு அதிகமாக நீர்ப்பாசனம் செய்ய வேண்டியதில்லை. ஆனால், பூங்கொத்து வரும் சமயங்களில் ஒரு முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும் எனவும், மழைபெய்தால் தண்ணீரை வடித்துவிட வேண்டும். விதைத்த 20 முதல் 25 நாள்கள் வரை களையில்லாமல் பாதுகாக்க வேண்டும் என்றார். பயிற்சி உதவியாளர் ஜெ.வனிதா பேசுகையில், சிறுதானியப் பயிர்களில் நிறைந்துள்ள பல்வேறு ஊட்டச்சத்துகள் குறித்தும், ரசாயன மருந்துகள் கலப்பில்லாமல் பிஸ்கட், ரொட்டி உள்ளிட்ட மதிப்புக் கூடடப்பட்ட பொருள்களை எளிய முறையில் தயாரிப்பது குறித்து செயல்விளக்கம் அளித்தார். இப்பயிற்சிக்கான  ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் ராஜா, திட்ட உதவியாளர் சுரேஷ் ஆகியோர் 
செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com