சுடச்சுட

  


  மன்னார்குடியை அடுத்துள்ள தென்பரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  இப்பள்ளி கடந்த 1910- ஆம் ஆண்டு திண்ணைப்பள்ளியாக தொடங்கப்பட்டு, 1918 - ஆம் ஆண்டு முதல் அரசு நடைமுறையின் கீழ் செயல்படத் தொடங்கியது. தொடர்ந்து 1998- ஆம் ஆண்டு  நடுநிலைப் பள்ளியாகவும், 2011- ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளி ஐ.நா. சபையில் பணியாற்றிய  ஐ.ஏ.எஸ்.அதிகாரி  முதல்  அலுவலகப் பணியாளர்கள் வரை எண்ணற்ற அரசு அலுவலர்களையும் ஆசிரியர்களையும் பொறியாளர்களையும் உருவாக்கியது என்ற பெருமையைப் பெற்றது.  இதில், தொடக்கப்பள்ளி மட்டும் 154 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின்நூற்றாண்டு விழா, விழாக்குழுத் தலைவர் கோ. ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது.  ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தேவகி, ஆவணி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் இரா.ஜெய்சங்கர், ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் வீரா. பாஸ்கரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் 
  தெ.நடராஜன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
  விழாவையொட்டி, ரூ. 2.5 லட்சம் செலவில் கட்டப்பட்ட நூற்றாண்டு விழா வளைவை, ஐ.நா. சபையின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் பள்ளியன் முன்னாள் மாணவருமான ஆர். கிருஷ்ணமாச்சாரியார் திறந்துவைத்தார். விழா மலரை, கோட்டூர் வட்டார கல்வி அலுவலர் உ. சிவக்குமார் வெளியிட, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தின் இணை இயக்குநர் கோ.உலகநாதன் பெற்றுக்கொண்டார். 
   இப்பள்ளியில் படித்து அரசுப் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் மாணவர்கள், இப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள், தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள், தற்போதைய அரசு ஊழியர்களான முன்னாள் மாணவர்கள் ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.  ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கோ.பிச்சைக்கண்ணு, ஊராட்சி முன்னாள் தலைவர் சு.நாராயணசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் கண்ணாதாசன், கிராம நிர்வாக அலுவலர் ஸ்டாலின், மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் பி.ரமேஷ், சமுதாயக் குழுமத் தலைவர் பி.மணிவண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியில் மன்னார்குடி அரசுக் கல்லூரி பேராசிரியர் பொன். இளங்கோவன், ஆசிரியர் பயிற்றுநர் நா.சுப்ரமணியன் , உடற்கல்வி ஆசிரியர் பஞ்சாபகேசன், ஆசிரியர் கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai