டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோருக்கு இலவச பயிற்சி வகுப்பு

திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.


திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு மூலம் இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் 6,491 காலிப்பணியிடங்களை நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான குறைந்த பட்ச கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்புவதற்கான கடைசி நாள் ஜூலை 14 எனவும், இதற்கான எழுத்துத்தேர்வு செப்டம்பர் 1- ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பயனடையும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின்  மற்றொரு பிரிவாக திருத்துறைப்பூண்டி  வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் (ஊராட்சி ஒன்றிய அலுவலகம்) ஜூலை 17-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. பயிற்சியின் போது இலவசமாக பாடக்குறிப்புகளும், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களும் மாணவர்களுக்கு வழங்கப்படும். மாதிரித்தேர்வுகளும் அவ்வப்போது நடத்தப்பட உள்ளன. இத்தேர்வுக்கு விண்ணப்பித்து பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், தங்களது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தேர்வுக்கு விண்ணப்பம் செய்த நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையின் நகல் ஆகியவற்றுடன் திருத்துறைப்பூண்டி  வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு, பயிற்சி நடைபெறும் நாளில் பிற்பகல் 3.30 மணிக்கு நேரில் சென்று பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com