மூங்கில் தோப்பில் தீ விபத்து
By DIN | Published On : 15th July 2019 01:58 AM | Last Updated : 15th July 2019 01:58 AM | அ+அ அ- |

கூத்தாநல்லூர் மூங்கில் தோப்பில் சனிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் ஏராளமான மரங்கள் சேதமடைந்தன.
கூத்தாநல்லூர் நகராட்சிக்குள்பட்ட மேல்கொண்டாழி தீன் நகரில் மூங்கில் தோப்பு உள்ளது. இந்தத் தோப்பில் தீ விபத்து நேரிட்டது குறித்து, அப்பகுதியினர் கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இருப்பினும் ஏராளமான மூங்கில் மரங்கள் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்தால் எழுந்த புகையால் அப்பகுதியில் உள்ள சாலை வழியே சென்றவர்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.