அனைத்து தமிழ்ச் சங்கங்களையும் ஒன்றிணைக்கும் பணிகளில் ஈடுபட முடிவு

அனைத்து தமிழ்ச் சங்கங்களையும் ஒன்றிணைக்கும் பணிகளில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.

அனைத்து தமிழ்ச் சங்கங்களையும் ஒன்றிணைக்கும் பணிகளில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.
திருவாரூர் மைய நூலகத்தில் தமிழியக்கத்தின் முதல் செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு, நிர்வாகி எண்கண் மணி தலைமை வகித்தார். இதில் எழுத்தாளர் உத்தமசோழன் பங்கேற்று, தமிழியக்கத்தின் நோக்கம் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் கந்தன், துணைச் செயலர் ஆசைத்தம்பி சரவணன், இணைச் செயலர் சக்தி செல்வகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: உச்ச நீதிமன்றத்தில் தமிழில் தீர்ப்பு வெளியாகி இருப்பதற்கு வரவேற்பு தெரிவிப்பது, தபால் தேர்வை தமிழ் போன்ற மாநில மொழிகளிலும் எழுதலாம் என்ற அறிவிப்புக்கு பாராட்டு தெரிவிப்பது, ஹிந்தி மொழி திணிப்பை கைவிட்டு ஆக்கபூர்வ பணிகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வலியுறுத்துவது, திருவாரூர் மாவட்டத்தில் பிறந்த சங்க கால புலவர்கள் பிறந்த இடங்களில் கல்வெட்டுகள் நிறுவுவது, வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகை வைக்க அரசு வலியுறுத்தக் கோருவது, பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க பெற்றோர்கள் முன் வர வேண்டும் என வலியுறுத்துவது, அனைத்து தமிழ் சங்கங்களையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com