காவல்துறையின் அறிவுரைகளை கடைப்பிடிக்க வேண்டும்: டிஎஸ்பி முத்தமிழ்ச்செல்வன் பேச்சு

காவல் துறையின் அறிவுரைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று நன்னிலம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆர். முத்தமிழ்ச்செல்வன் பேசினார்.

காவல் துறையின் அறிவுரைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று நன்னிலம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆர். முத்தமிழ்ச்செல்வன் பேசினார்.
நன்னிலம் அருகேயுள்ள பனங்குடி கிராமத்தில் காவல் துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசியது: பொதுமக்கள் காவல் துறையின் பாதுகாப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும், குறிப்பாக இருசக்கர வாகனம் ஓட்டிச் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும், செல்லிடப்பேசி பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது, காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும். 
பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறும் இன்றைய கால கட்டத்தில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை எச்சரிக்கையுடன் கவனித்து வரவேண்டும், அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை கொண்டு கண்காணிக்க வேண்டும், குழந்தைகளிடம் நண்பர்களைப் போல பழக வேண்டும். 
நாள்தோறும் அன்றாட நிகழ்வுகளை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை அறிந்து அவர்கள் தவறு செய்யாத வகையில் பாதுகாக்க முடியும். இதேபோல சிசிடிவி கேமரா வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிசிடிவி கேமரா வைக்க வாய்ப்புள்ளவர்கள் தங்களது இல்லங்களிலும், வியாபார தலங்களிலும் பொருத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு பொருத்தினால் குற்றங்கள் குறைய நிறைய வாய்ப்பு இருக்கிறது. குற்றவாளிகளும் குற்றம்  செய்யும்போது சிசிடிவி கேமரா இருப்பதை பார்த்து அத்துடன் திரும்பிச் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, இதுபோன்ற காவல் துறையின் பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடித்தால் குற்றங்களை வெகுவாக குறைக்க முடியும் என்றார் அவர். 
விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது, பொதுமக்கள் தெரிவித்த குறைகளை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க காவல் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். 
இதில், காவல்துறையினர், வர்த்தக சங்கத் தலைவர் ஆர். சண்முகம், செயலர் டி. சரவணன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அன்பழகன், வர்த்தக சங்க நிர்வாகிகள், பனங்குடி, மேலவாசல், மகிழஞ்சேரி மற்றும் ஆண்டிபந்தலை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com