நிலத்தடி நீர் செறிவூட்டும் பணி: அமைச்சர் தொடங்கி வைத்தார்

ஆலங்குடி ஊராட்சிக்குள்பட்ட கப்பக்குளத்தில் நிலத்தடி நீர் செறிவூட்டும் பணியை தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். 

ஆலங்குடி ஊராட்சிக்குள்பட்ட கப்பக்குளத்தில் நிலத்தடி நீர் செறிவூட்டும் பணியை தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். 
ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நீர்மேலாண்மை பணிகளுக்காக நிலத்தடி நீர் செறிவூட்டல் குழாய் பதிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பாரத பிரதமர் இந்தியா முழுவதும் நீர் மேலாண்மை குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்தியாவில் முதன்முதலாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை செயல்படுத்தியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா . மழைநீரை சேகரிக்க தமிழக அரசு உறிஞ்சுக்குழாய் அமைத்தல், மழைநீர் சேகரிப்பு தொட்டிக் கட்டமைப்பை  உறுதிச்செய்தல், நிலத்தடிநீர் செறிவூட்ட குழாய்  அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில், 430 ஊராட்சிகளிலும் உள்ள குளங்களில் தலா ரூ. 23 ஆயிரம் மதிப்பில் நிலத்தடி நீர் செறிவூட்டல் குழாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை உயர்த்த மழை நீரை சேமிக்க வேண்டும். மறுசுழற்சி முறையில் நீரை பயன்படுத்த வேண்டும். நீரை சிக்கனமாக பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும் என்றார் காமராஜ். 
மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com