மணல் சரிந்து விவசாயி சாவு
By DIN | Published On : 24th July 2019 06:33 AM | Last Updated : 24th July 2019 06:33 AM | அ+அ அ- |

கூத்தாநல்லூர் அருகே வீடு கட்டுவதற்கு ஆற்றில் மணல் அள்ளியபோது, மணல் சரிந்து விவசாயி ஒருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
வடபாதிமங்கலம் காவல் சரகத்துக்குள்பட்ட கீழமணலி, பிரதான சாலையைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (55). விவசாயியான இவர், தனது கூரை வீட்டை பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், மாடி வீடாகக் கட்டி வருகிறார். இதையொட்டி, கீழமணலி தலைப்பில் செவ்வாய்க்கிழமை மாலை பள்ளம் தோண்டி அன்னக்கூடையில் மணல் எடுத்துள்ளார். அப்போது, மணல் சரிந்ததில், சுந்தர்ராஜ் மணலில் சிக்கி அதே இடத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து வடபாதிமங்கலம் காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி, உதவி ஆயவாளர் சுப்ரமணியன் மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுந்தர்ராஜூக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.