Enable Javscript for better performance
ஆக்கிரமிப்புகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    ஆலத்தம்பாடியில்...
    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலத்தம்பாடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
    ஆலத்தம்பாடி கடைவீதியில் ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக திருவாரூரில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் அறிவுறுத்தலின் பேரில், திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் ராஜன் பாபு, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் க. ஜெயந்தி, உதவிப் பொறியாளர் ரவி ஆகியோர் மேற்பார்வையில், ஆலத்தம்பாடி கடைதெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
    இதையொட்டி, திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ( பொ)  இனிக்கோதிவ்யன் மேற்பார்வையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.


    கூத்தாநல்லூரில்...
    கூத்தாநல்லூரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை,நெடுஞ்சாலைத் துறையினர் புதன்கிழமை அகற்றினர்.
    கூத்தாநல்லூரில், திருவாரூர்- மன்னார்குடி பிரதானச் சாலை, கொரடாச்சேரி- வடபாதிமங்கலம் பிரதானச் சாலைகளில், திருவாரூர் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் எஸ். சந்திரசேகர், மன்னார்குடி உதவி கோட்டப் பொறியாளர் பானுதாசன், நீடாமங்கலம் உதவி பொறியாளர் விமல், திருவாரூர் இளநிலைப் பொறியாளர் சு. குமாரச்செல்வன் உள்ளிட்டோர், காவல் உதவி ஆய்வார் கமல்ராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
    மரக்கடையிலிருந்து தொடங்கி, அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றறினர். சிலர் தாமாகவே முன் வந்து தங்களது கடையின் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai