Enable Javscript for better performance
இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் அருகேயுள்ள தேவங்குடி காவல்நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    மன்னார்குடியைச் சேர்ந்த ஏ.சேரமணி என்பவர் மீது தேவங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, நீடாமங்கலம்  ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் டி.கே.மார்க்ஸ் தலைமை வகித்தார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் நடேச.தமிழார்வன் முன்னிலை வகித்தார். கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai