Enable Javscript for better performance
இரண்டு இடங்களில் திருட்டு முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி அருகே இரண்டு இடங்களில் திருட்டு முயற்சி நிகழ்ந்துள்ளது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    மன்னார்குடியை அடுத்த மேலநத்தம் பிரதானசாலையை சேர்ந்தவர் ஜெ. ஜோசப் ஜெயக்குமார். இவர், மும்பையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஸ்வாச ஜெயமேரி (32) செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தனியே தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டின் ஓட்டை பிரித்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 4 பேர், விஸ்வாச ஜெயமேரியின் கழுத்தில் கத்தியை வைத்து பணம், நகை இருந்தால் எடுத்து தர வேண்டும் என மிரட்டினராம். விஸ்வாச ஜெயமேரி சத்தமிட்டதால் மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.
     இதேபோல், மேலநத்தம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் திருட முயன்றதாகக் கூறப்படுகிறது.
    இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும், திருமக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai