Enable Javscript for better performance
கல்லூரியில் திறன் வளர் மேம்பாட்டு நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் இராபியம்மாள் அகமது மெய்தீன் கல்லூரியில் அனைத்துத் துறை இளங்கலை முதலாமாண்டு மாணவிகளுக்கு திறன் வளர் மேம்பாட்டு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எஸ். ஸ்ரீதேவி தலைமை வகித்தார். தனியார் நிறுவன மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் முருகபாரதி பங்கேற்று, திறன் மேம்பாடு குறித்து மாணவிகளுக்கு விளக்கிக் கூறினார். இதில் தகவல் தொழில்நுட்ப துறைப் பேராசிரியர் எஸ். ரசூல் பேகம், மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai