Enable Javscript for better performance
குடிநீர் குழாயில் கழிவுநீர் கலப்பு: குழந்தைகளுக்கு வாந்தி, பேதி- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் குழாயில் கழிவுநீர் கலப்பு: குழந்தைகளுக்கு வாந்தி, பேதி

    By DIN  |   Published on : 25th July 2019 10:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நன்னிலம் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் கலப்பதால், அதைப் பயன்படுத்திய அப்பகுதி குழந்தைகள் சிலருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.
    நன்னிலம் வட்டம், பூந்தோட்டம் அருகே உள்ள  கீழசெம்மங்குடி கிராமத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு பாசன வாய்க்கால் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதுவரை அந்த குடிநீர் குழாயை சரி செய்யவில்லை. இதனால், குழாயில் உள்ள உடைப்பின் வழியாக குடிநீரில் கழிவு நீரும் கலப்பதாகக் கூறப்படுகிறது. 
    இந்தக் குடிநீரை பயன்படுத்திய அப்பகுதியில் உள்ள குழந்தைகள் சிலருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. அவர்கள் பூந்தோட்டம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனால், அவர்களால் பள்ளிக்குச் செல்லமுடியவில்லை.
     கீழசெம்மங்குடி  கிராம மக்களுக்கு குடிநீருக்கு வேறு மாற்று ஏற்பாடு இல்லாத காரணத்தினால், இதே குடிநீரைத்தான் கிராம மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். எனவே, மேலும் கிராமத்தில் உள்ள பலருக்கு இதுபோன்ற பாதிப்பு பரவுவதற்கு முன்னர் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai