Enable Javscript for better performance
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    முத்துப்பேட்டையில் தேசிய புலனாய்வுப் பிரிவை விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
    முத்துப்பேட்டை மஜிதியா தெருவைச் சேர்ந்த முகமது மகன்  தாஜிதீன். இவர், தேசிய புலனாய்வு அமைப்பு இஸ்லாமியர்களை வேட்டையாடுவதாக சமூக வலைதளங்களில்  விமர்சனம் செய்து பதிவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, முத்துப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர்  தினேஷ்குமார், முத்துப்பேட்டை காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, எம்பிடி புரட்சி இயக்கம் என்ற பெயரில் பதிவு செய்த தாஜ் என்கிற தாஜிதீன் என்பவரை கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai