Enable Javscript for better performance
பெட்ரோல் பங்க் சேதம்: 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    நன்னிலம் அருகே  பெட்ரோல் விற்பனை நிலையத்தை சேதப்படுத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
    எரவாஞ்சேரியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர், மணவாளநல்லூர் பெட்ரோல் பங்கில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த பெட்ரோல் பங்குக்கு செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்த  குடவாசல் மேலத்தெருவைச் சேர்ந்த வினோத், மருத்துவக்குடி சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த சதீஷ் ஆகிய இருவரும் மது போதையில் தகராறு செய்தனராம். மேலும், பெட்ரோல் பங்கில் உள்ள பொருள்களை சேதப்படுத்திவிட்டு, மேலாளர் சத்தியமூர்த்தியையும் தாக்கி விட்டு, தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து, குடவாசல் காவல் நிலையத்தில் சத்தியமூர்த்தி அளித்த புகாரின் பேரில்,  ஆய்வாளர் ராஜகோபால் வழக்குப் பதிவு செய்து, வினோத் மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai