Enable Javscript for better performance
மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி- Dinamani

சுடச்சுட

    

    கூத்தாநல்லூர் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
    கூத்தாநல்லூரை அடுத்த வெங்காரம் பேரையூர், காலனித் தெருவைச் சேர்ந்த அம்மாசி என்பவரது மகன் அன்பரசன் (18). இவர், கொல்லையில் இருந்த மரத்தை வெட்டியபோது, நிலைதடுமாறி அருகில் உள்ள மின் கம்பியைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மின்சாரம் பாய்ந்து அன்பரசன் உயிரிழந்தார்.
    கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் அம்மாசி கொடுத்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் கமல்ராஜ் வழக்குப் பதிந்து, அன்பரசனின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai