Enable Javscript for better performance
வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசின் முத்ரா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கடன் வழங்குவதில் அலட்சியப் போக்குடன் நடந்துகொள்வதாக வங்கி மேலாளரைக் கண்டித்து, மன்னார்குடியில் பாஜகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     சிறு, குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாமல், வங்கிகளில் முத்ரா கடன் வசதி திட்டத்தில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், சில வங்கிகள் இத்திட்டத்தில் கடன் வழங்காமல், அலட்சியப் போக்குடன் நடந்துகொள்வதாகக் கூறப்படுகிறது.  இவ்வாறு செயல்படும் மன்னார்குடி கோபாலசமுத்திரம் கீழவீதியில் உள்ள தனியார் வங்கியின் கிளை மேலாளரை கண்டித்து, வங்கியின் அருகே பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் நகரத் தலைவர் பால. பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் வி.கே. செல்வம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் சிவ. காமராஜ் ஆர்ப்பாட்டக் கோரிக்கையை விளக்கிப்
    பேசினர்.
     இதில், பாஜக நகர பொதுச் செயலர் அய்யபன், ஒன்றியத் தலைவர் எஸ். ராஜேஷ், ஒன்றியச் செயலர்கள் அய்யாகுட்டி (மன்னார்குடி), அறிவுராம் (நீடாமங்கலம்), மாவட்ட வர்த்தகர் பிரிவு செயலர் வீர. திவாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     நிகழ்விடத்துக்கு வந்த மன்னார்குடி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட போலீஸார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேரையும் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai