தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்
By DIN | Published On : 29th July 2019 07:40 AM | Last Updated : 29th July 2019 07:40 AM | அ+அ அ- |

தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநிலச் செயலர் சி.வி. இம்ரான் பேசினார்.
திருவாரூர் அருகேயுள்ள அடியக்கமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தீவிரவாதத்துக்கு எதிரான பிரசார கூட்டத்தில் பங்கேற்று அவர் மேலும் பேசியது: இஸ்லாம் என்பது அன்பை மட்டும் போதிக்கக்கூடிய மார்க்கம். இஸ்லாம் தீவிரவாதத்தை முற்றிலும் வேறறுக்கிறது. தீவிரவாத, பயங்கரவாத செயல்களை யார் செய்தாலும், அவர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும் அவர் சார்ந்த மதத்தோடு ஒப்பிடக் கூடாது. தீவிரவாத செயல்களில் ஈடுபடும் நபர்களை ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்து தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் மனித சமூகத்துக்கு முற்றிலும் எதிரானவர்கள். அவர்கள் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றார் அவர்.
கிளைச் செயலர் முகமது ஹக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் அப்துல் மாலிக், கிளை துணைத் தலைவர் ஆசிக், துணைச் செயலர் கபீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.