முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
கிராமக் கோயில் பூஜாரிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 30th July 2019 06:57 AM | Last Updated : 30th July 2019 06:57 AM | அ+அ அ- |

கிராமக் கோயில் பூஜாரிகளுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கக் கோரி திருவாரூரில் கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவை சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி அனைத்து பூஜாரிகளுக்கும் மாத ஊக்கத் தொகை வழங்க வேண்டும், பூஜாரிகள் ஓய்வூதியத்துக்கான ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ. 72 ஆயிரமாக உயர்த்த வேண்டும், ஓய்வூதியத் தொகையை ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், இலவச தொகுப்பு வீடுகள் பூஜாரிகளுக்கு வழங்க வேண்டும், தமிழகத்தில் உள்ள கோயில்களில் அறங்காவலர் நியமிக்கப்படும்போது, அக்கோயிலைச் சார்ந்த பூஜாரி ஒருவரையும் குழுவில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விஷ்வ இந்து பரிஷத் திருவாரூர் மாவட்டச் செயலர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவை மற்றும் அருள்வாக்கு அருள்வோர் பேரவையைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.