கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி
By DIN | Published On : 09th June 2019 12:36 AM | Last Updated : 09th June 2019 12:36 AM | அ+அ அ- |

கூத்தாநல்லூர் அருகே கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் நிறுவனத்தினர் சனிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கினர்.
கடந்த ஆண்டு வீசிய கஜா புயலால் திருவாரூர், நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தில் லட்சக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள், ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும், பொதுமக்களும் பல்வேறு உதவிகளைச் செய்தனர்.
இந்நிலையில், சென்னை காசா உம்கார் தனியார் நிறுவனத்தினர் யேசுபாதம் என்பவர் தலைமையில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகேஸ்வரன், உதவியாளர் முருகேசன் உள்ளிட்டோர், மளிகைப் பொருட்கள், பாத்திரம், பாய் உள்ளிட்ட 69 பொருள்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களை கூத்தாநல்லூர் பகுதியில் சனிக்கிழமை வழங்கினர்.