சுடச்சுட

  

  திருத்துறைப்பூண்டி பகுதியில் ஜூன் 15-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்விக்டர் தெரிவித்துள்ளார். 
  இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருத்துறைப்பூண்டி பள்ளங்கோவில் துனை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூன் 15) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, இத்துனை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான திருத்துறைப்பூண்டி நகரம், வேளுர், பாண்டி, குன்னலூர், எடையூர், சங்கேந்தி, உதயமார்த்தாண்டபுரம், கோட்டூர், விளக்குடி, பள்ளங்கோவில், ஆலிவலம், ஆண்டாங்கரை, குன்னூர், பாமணி, கொற்கை, கொக்கலாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இதேபோல், பெருகவாழ்ந்தான் துனை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளுக்கும் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai