சுடச்சுட

  

  திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடியில் குடிநீர் விநியோகம் ரத்து

  By DIN  |   Published on : 14th June 2019 07:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி பகுதிகளில் ஜூன் 17, 18 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊரக குடிநீர் திட்டக் கோட்ட நிர்வாகப் பொறியாளர் (பொ) ந. கோபிநாத் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேதாரண்யம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் பாபநாசம் ஒன்றியம், அண்டக்குடி காவிரி ஆற்றில் குழாய் தாங்கும் பாலத்தில் செல்லும் 900 மில்லி மீட்டர் விட்டமுள்ள எம்.எஸ். குழாயில் வெல்டிங் பணிகள் மற்றும் மணிக்கரையூர் குழாய் தாங்கும் பாலத்தின் கீழ் பகுதியில் செல்லும் 900 மில்லி மீட்டர் விட்டமுள்ள பி.எஸ்.சி குழாய் உடைப்பு சரிசெய்யும் பணிகள் நடைபெறவுள்ளன. 
  இதன் காரணாக ஜூன் 17, 18 ஆகிய இரு நாள்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளன. எனவே, இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் திருவாரூர், திருத்துறைப்பூண்டி ஆகிய நகராட்சிகள், முத்துப்பேட்டை பேரூராட்சி, நீடாமங்கலம்,  வலங்கைமான், மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய ஒன்றிய பகுதிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai