சுடச்சுட

  

  மன்னார்குடி அருகே தீ விபத்தில் குடிசையை இழந்த குடும்பத்தினருக்கு, கிராம மக்கள் சார்பில் ரூ. 5 ஆயிரம் நிதியுதவி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
   மன்னார்குடி அருகேயுள்ள ராமபுரம் தெற்குத் தெருவில் கா. மாறன்-தேன்மொழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள், செவ்வாய்க்கிழமை தங்களது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தபோது, வீட்டின் கூரை திடீரென தீப்பிடித்து எரிந்ததுடன், அருகிலிருந்த மாட்டுத் தொழுவத்திற்கும் தீ பரவியது. 
  இதில், கூரை வீடும், மாட்டுக் கொட்டகையும் முழுமையாக எரிந்து சேதமடைந்ததுடன், தொழுவத்தில் கட்டியிருந்த சினைப் பசு மாடு மற்றும் இரண்டு கன்றுக்குட்டிகளுக்கும்  தீக்காயம் ஏற்பட்டது.
  இந்நிலையில்,  குடிசை வீடு, பொருள்களை இழந்ததுடன் வருவாய் கொடுத்து வந்த பசு மாட்டுக்கும் பாதிப்பு ஏற்பட்டதால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்த கூலித் தொழிலாளியான மாறன் குடும்பத்துக்கு உதவிடும் வகையில், ராமபுரம் கிராமத்தின் சார்பில் திரட்டப்பட்ட ரூ. 5 ஆயிரம் நிதியை கிராம கமிட்டியை சேர்ந்த துரை. அருள்ராஜன் வழங்கினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai